Advertisement

புளி அதிகம் சேர்ப்பதால் இவ்வளவு கெடுதலா

By: vaithegi Sun, 11 Dec 2022 7:47:22 PM

புளி அதிகம் சேர்ப்பதால் இவ்வளவு கெடுதலா

அறுசுவைகளில் இனிப்பு, புளிப்பு, காரம் மூன்றும் தான் அதிகமாக எடுத்துகொள்கிறோம். புளி எல்லோருக்கும் பிடித்தமானதுதான். இது ஊட்டச்சத்துகளையும் பல நன்மைகளையும் உடலுக்கு தருகிறது என்றாலும் இது பல பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது.

சுவை மொட்டுகளில் எளிதாக இந்த சுவையை உணர்ந்துகொள்ள முடியும். அதனால் தான் பலவிதமான உணவுகளில் இவை சேர்க்கப்படுகிறது. அளவாக இருக்கும் வரை இவை பிரச்சனையில்லை. ஆனால் அதிகமாக எடுத்துகொள்ளும் போது உண்டாகும் பக்கவிளைவுகள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம். அதை தான் இப்போது பார்க்க போகிறோம்.

புளி உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ஒவ்வாமை ஏற்படலாம். தோல் சிவத்தல், வீக்கம், தலைவலி, வாந்தி, அரிப்பு போன்றவை உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். புளி அதிக அமிலத்தன்மை கொண்டது. புளியை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளும் போது இது பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு நாக்கு எரிச்சலை உண்டாக்கும். உணவில் புளி சேர்ப்பதை குறைக்க வேண்டும்.

tamarind,problem ,புளி ,பிரச்சனை

விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உணவில் புளியை அதிகமாக சாப்பிடுவது பித்தப்பையில் கற்கள் உருவாக வழிவகுக்கும். காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, மஞ்சள் காமாலை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.

உணவில் புளியை அதிகம் சாப்பிட்டால் சாப்பிட்ட உணவு ஜீரணமாகாது. இது நீண்ட காலத்திற்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். உணவில் இருந்து நமக்கு போதிய சத்துக்கள் கிடைப்பதில்லை. அதிக அமிலத்தன்மை காரணமாகவும் வயிற்று வலி ஏற்படலாம்.

Tags :