Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான விகிதத்தில் தண்ணீர் பருக வேண்டும்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான விகிதத்தில் தண்ணீர் பருக வேண்டும்

By: vaithegi Wed, 11 Jan 2023 10:35:30 AM

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான விகிதத்தில் தண்ணீர் பருக வேண்டும்

சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்று 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருந்தால் தான் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும். ஆனால் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக தண்ணீர் குடிக்க வேண்டுமா? இல்லை தவிர்க்கலாமா? என்ற சந்தேகம் அதிகளவில் நம்மில் பலருக்கு எழக்கூடும்.

இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக தண்ணீர் குடித்தால் நடுஇரவில் கழிப்பறைக்குச் செல்ல நேரிடும் என்பதால் பலர் இதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிப்பதால் நீர் அழுத்தம் மற்றும் தூக்கம் கெடுதல் ஆகிய பிரச்சனைகள் மட்டும் தான் ஏற்படுமே தவிர வேறு எந்தவிதமான உடல் நல பிரச்சனைகளும் ஏற்படாது.

எனவே நாம் எந்த வித அச்சமும் இன்றி தூங்க செல்வதற்கு முன்னதாக தண்ணீர் தாராளமாக அருந்தலாம். அதிலும் வெதுவெதுப்பாக நீரை இரவு குடித்துவிட்டு தூங்கும் போது, இரவு முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்கிறது.

water,health ,தண்ணீர் ,ஆரோக்கியம்

மேலும் இதோடு வயிற்று வலி அல்லது உடல் பிடிப்புகளை எளிதாக்குவதற்கும் உதவுகிறது. மேலும் வெதுவெதுப்பான நீர் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலில் கழிவுகளை அகற்றுவதை எளிதாக்குகிறது. வியர்வையும் அதிகளவில் வெளியேற்றுகிறது.

இரவு தண்ணீர் குடிக்கும் போது நாள் முழுவதும் இருந்த உடல் அலுப்பு மற்றும் மன அழுத்தம் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள். தூங்கச்செல்வதற்கு முன்னதாக தண்ணீர் அருந்தும் போது உடலில் புதிய தசைகளை உருவாக்குவதோடு, தசைகளை வலுவாக்கும். உடலை வெப்பநிலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உயர்கிறது மற்றும் இதய அழுத்தத்தைக் குறைக்கிறது.

Tags :
|