Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குழந்தை பிறந்ததும் முடி அதிகம் கொட்டும்.. என்ன செய்யலாம்..

குழந்தை பிறந்ததும் முடி அதிகம் கொட்டும்.. என்ன செய்யலாம்..

By: Monisha Tue, 12 July 2022 7:50:39 PM

குழந்தை பிறந்ததும் முடி அதிகம் கொட்டும்.. என்ன செய்யலாம்..

பிரசவத்துக்கு பிறகு புதிய வரவால் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும் பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்பில் முடி இழப்பு அதிகரிக்கும்.பெண்களின் தடிமனான முழுமையான முடி கர்ப்பத்தின் சிறந்த மாற்றங்களில் ஒன்றாகும் பல கர்ப்பிணிப்பெண்கள் கர்ப்பகாலத்தில் முடி வளர்ச்சியை வழக்கத்தை விட அதிகமாக கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இது தற்காலிகமானது.

சில வாரங்களுக்கு பிறகு தலைமுடி உதிரத்தொடங்கும் போது அது விரும்பத்தகாத ஆச்சரியமாக இருக்கும்.பிரசவத்துக்கு பிறகு முடி உதிர்வு இயல்பானது என்றாலும் அது தீவிரமாகாமல் தடுக்க சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

hair,falls,baby,birth ,குழந்தை,அதிகம் ,கொட்டும்,முடி,

உணவு முறை ,உணவு முறையில் ஆரோக்கியமான டயட் பின்பற்ற வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதற்காக சிறந்த டயட் பின்பற்றினாலும் கூட சமச்சீரான சீரான உணவை எடுத்துகொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.இது முடி வளர்ச்ச்சியை ஊக்குவிக்கும்.

முடி உதிர்வு நிற்பதற்கு வால்யூமைசிங் ஷாம்புக்களை பயன்படுத்துங்கள். இதில் புரோட்டின் போன்ற பொருள்கள் உள்ளன. அவை முடியை பூசி உருவாக்குகின்றன.இதனால் முடி அடர்த்தியாக கட்டும். தளர்வானதாக காட்டக்கூடிய கனமான கண்டிஷனர்களை தவிர்ப்பது நல்லது.

கூந்தலை முறையாக பராமரிக்க வேண்டும். தளர்வாக வைத்திராமல் பின்னலிடுங்கள். சிக்கில்லாமல் வைத்திருங்கள். அழுக்குகள் தேங்கினால் கூந்தல் வறண்டு பொடுகை உண்டாக்கி முடி உதிர்தலையும் அதிகரித்துவிடும்.அதனால் கூந்தலை சுத்தமாக வைத்திருப்பது நல்லது.


Tags :
|
|
|