Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆட்சி மாற்றத்தில் அதிமுக எழுச்சி மாநாடு அடித்தளம்... முன்னாள் அமைச்சர் பெருமிதம்

ஆட்சி மாற்றத்தில் அதிமுக எழுச்சி மாநாடு அடித்தளம்... முன்னாள் அமைச்சர் பெருமிதம்

By: Nagaraj Wed, 23 Aug 2023 8:32:02 PM

ஆட்சி மாற்றத்தில் அதிமுக எழுச்சி மாநாடு அடித்தளம்... முன்னாள் அமைச்சர் பெருமிதம்

மதுரை: ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம்... அதிமுக எழுச்சி மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- அதிமுக எழுச்சி மாநாடு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமிட்டுள்ளது. அதிமுக மாநாட்டில் மக்கள் நலனுக்காக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக-காங்கிரஸ் ஆட்சியில்தான் கச்சத்தீவுக்கு தாரை வார்க்கப்பட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் மரணங்களுக்கு திமுக -காங்கிரஸ் கட்சிகளே பொறுப்பு.

aiadmk,conference,interview,rb udayakumar,regime change,tamil nadu,uprising ,அதிமுக, ஆட்சி மாற்றம், ஆர்.பி உதயகுமார், எழுச்சி, தமிழகம், பேட்டி, மாநாடு

ராகுல்காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறுகிறார்கள். அவர் எப்போது பிரதமர் ஆவது? எப்போது நீட் தேர்வை ரத்து செய்வது? சந்திராயன் 3-ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என வேண்டுகிறேன்.
சந்திராயன் 3-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்குவது இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|