Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இருதயக் கோளாறுகள், நீரழிவு நோய் போக்க உதவும் பாதாம்

இருதயக் கோளாறுகள், நீரழிவு நோய் போக்க உதவும் பாதாம்

By: Nagaraj Sat, 29 July 2023 8:19:47 PM

இருதயக் கோளாறுகள், நீரழிவு நோய் போக்க உதவும் பாதாம்

சென்னை: சுவாசக் கோளாறுகள், இருமல், இருதயக் கோளாறுகள், நீரழிவு நோய், சருமக் கோளாறுகள், பற்பாதுகாப்பு, இரத்தசோகை, ஆண்மைக்குறைவு, பித்தப்பைக்கல் போன்றவற்றை போக்குவதற்கு பாதாம் (Almond) துணை நிற்கிறது.

புரதம், நார்சத்தோடு உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இதில் உள்ளது. அதோடு வைட்டமின் E, துத்தநாகம், சுண்ணாம்பு சத்து (Calsium), இரும்பு சத்து, பாஸ்வரம்,தாமிரம், பொட்டாசியம், செலோனியம் மற்றும் மெக்னீசியமும் இதில் உள்ளது. புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் பி17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது.

almonds,dosage,insulin,safety available,sugar ,அளவு, இன்சுலின், சர்க்கரை, பாதாம், பாதுகாப்பு, கிடைக்கிறது

பாதாமில் உள்ள போலிக் அமிலம் இரத்தக் கலைகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து நிறுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. பாதாமில் உள்ள சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளைத் திறனை மேம்படுத்துவதற்கு பெரும் பங்கு வகிக்கிறது.

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பதால் நீரழிவு (Diabetes) நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

Tags :
|