Advertisement

உடல் எடையை குறைக்க உதவும் மாற்று உணவுகள்

By: Nagaraj Fri, 23 Sept 2022 10:20:31 PM

உடல் எடையை குறைக்க உதவும் மாற்று உணவுகள்

சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டும் என்றாலே நாம் மிகவும் விரும்பி உண்ணும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர், ஆனால் அதற்கு மாற்றாக சில உணவுகள் உள்ளன.

நீங்கள் இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளுக்கு மாறாக, மாற்று உணவாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள், நிச்சயமாக உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்படும்.

அதிகமாக காபி குடிப்பது உடலுக்கு தீங்கானது. ஆனால், கிரீன் டீ உடலுக்கும் நல்லது, உடல் எடையைக் குறைக்கவும் உதவும். ருசிக்காக ஐஸ் கிரீம் சாப்பிடுவதை தவிர்த்து உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் பழங்களை சாப்பிடலாம். பழங்களை தனியாகவும் சாப்பிடலாம் அல்லது பழரசமாக (ஜூஸ்) செய்து சாப்பிடலாம்.

இனிப்பு யாராலும் தடுக்க முடியாத உணவு. ஆனால் இது உடல் எடையை என வந்த பிறகு நீங்கள் சர்க்கரையை தவிர்த்து தான் ஆக வேண்டும். இதற்கு மாற்று உணவாக நீங்கள் தேனை சாப்பிடலாம். தேனை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் கூட உடல் எடை குறையும் என்பது நம்ம ஊர் பாட்டி வைத்தியம்.

health,chemical composition,fresh water,body weight,artificial ,உடல் நலம், இரசாயன கலப்பு, இளநீர், உடல் எடை, செயற்கை

உருளைக்கிழங்கு வாயுப் பிரச்சனை மற்றும் உடல் எடையை அதிகரிக்கும் பண்புடையது. ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கு உடல் எடை குறைக்கவும் உதவும், உங்கள் கல்லீரலுக்கும் சக்தி கொடுக்கும் தன்மையுடையது.

கிரீம் உணவுகள் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலும் அனைவரிடமும் இருக்கிறது. உடல் எடை அதிகரிக்க இதுவும் ஓர் காரணமாக விளங்குகிறது. எனவே, இதற்கு மாற்றாக நீங்கள் தயிரை சாப்பிடலாம். ஆனால், வீட்டில் தயாரித்த சுத்தமான தயிர். சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான தயிர்களில் ஃப்ளேவர்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதுவும், உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

உடலியக்க சக்தியை அதிகரிக்க கட்டாயம் நமக்கு ஓர் எனர்ஜி ட்ரின்க் வேண்டும். ஆனால் இரசாயன கலப்பு உள்ள பூச்சிக்கொல்லி அல்ல இயற்கை பானமான இளநீர். எனர்ஜி ட்ரிங்கில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் உடல்நலத்திற்கு தீங்கானது.

Tags :
|