Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புற்றுநோயை எதிர்க்கும் ஆரோக்கிய உணவுகள் அவகேடோ, பாதாம் பருப்பு

புற்றுநோயை எதிர்க்கும் ஆரோக்கிய உணவுகள் அவகேடோ, பாதாம் பருப்பு

By: Nagaraj Sat, 21 Oct 2023 06:33:57 AM

புற்றுநோயை எதிர்க்கும் ஆரோக்கிய உணவுகள் அவகேடோ, பாதாம் பருப்பு

சென்னை: வருமுன் காப்பதே என்றும் நலம். அதுபோல்தான் புற்றுநோய் என்ற உயிர் கொல்லி நோயை நம்மிடம் அண்டவிடாமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும்.

அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது. எனவே அவகேடோவை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி நம் உடலுக்கு ஏற்படுகிறது.

exercise,almonds,dna changes,cashews ,உடற்பயிற்சி, பாதாம் பருப்பு, டிஎன்ஏ மாற்றங்கள், முந்திரி பருப்பு

பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு போன்றவற்றை உட்கொள்ளும் மெடிட்டரேனியன் டயட் பெருங்குடலில் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.கொலோன் கேன்சர் எனப்படுவது பெங்குடலில் பரவும் புற்றுநோய். இந்த புற்றுநோய் தோன்றுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. பெருங்குடல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு டி.என்.ஏ.வில் ஏற்படும் மாற்றமே மிகப்பெரிய பிரச்சனை.

இது தொடர்பாக பாஸ்டன் டனா-ஃபார்பர் கேன்சர் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வில், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரத்திற்கு 57 கிராம் ட்ரீ நட்ஸ், 48 பாதாம் பருப்புகள், 36 முந்திரி பருப்புகள் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். அதனால் ஏற்படும் டி.என்.ஏ. மாற்றங்களும் தடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

தினந்தோறும் உடற்பயிற்சியுடன் சேர்ந்து, மெடிட்டரேனியன் டயட் எனப்படும் இந்த நட்ஸ் சாப்பிட்டுவந்தால் கேன்சர் பாதிப்பால் உயிரிழப்பதை நீண்ட நாட்களுக்கு ஒத்திப் போடலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :