Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குழந்தைகளின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் ஏற்படலாம்

குழந்தைகளின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் ஏற்படலாம்

By: Karunakaran Sat, 26 Sept 2020 2:17:36 PM

குழந்தைகளின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் ஏற்படலாம்

உண்மையில் குழந்தையின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் இருக்கலாம் என்பதை பற்றி அறிய வரும்போது உள்ளபடியே மனம் வெதும்புகிறது. அவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கிறது. அதனை ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் வாய் மூடி உம்மென்று அமர்ந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் தங்களது மன வலிகளைக் கோபமாக வெளிப்படுத்துவார்கள்.

இதற்கு பின்னணி சுற்றுப்புற சூழல்கள்தான் என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தைகள் வளர்கின்ற வீட்டில் ஏற்படும் வாக்குவாதங்கள் சண்டைகள் போன்றவற்றால் அவைகள் மன ரீதியாக பயத்தை சந்திக்கின்றன. பெற்றோர்களுடன் விரிசல்கள் ஏற்படுகின்றன. உறவினர்களுடனும் பேசாமல் தனித்து இருக்க விரும்புகின்றனர். குடும்பத்தில் பிரிவுகள் நிகழும்போது குழந்தைகளால் அதனைத் தாங்க முடிவதில்லை. அப்பா அம்மா ஆகிய இருவரும் விவாகரத்து மூலம் பிரிவது என்பது குழந்தைகளின் பிஞ்சு இதயத்தை நொறுங்க செய்கிறது.

anxiety,grief,hearts,children ,கவலை, துக்கம், இதயங்கள், குழந்தைகள்

அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பிரிவும் அவர்களை பாதிக்கிறது. செல்லப்பிராணிகள் சில சமயம் இறந்து விட்டாலோ பிரிந்து விட்டாலோ அவர்கள் துயரத்தின் அளவு அதிகமாகிறது. உடன் வளரும் குழந்தைகளின் பிடிவாதம் முரட்டுத்தனம் எல்லாமே இந்தக் குழந்தையையும் பாதிக்கிறது. அதைப்போலவே பள்ளியில் பழகும் சக குழந்தைகளின் குணங்கள் இந்தக் குழந்தையை கடுமையாக மன ரீதியாகவே பாதிப்படைய செய்கிறது. குழந்தையை யாரேனும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமயங்களில் வெளியில் சொல்லத் தெரியாமல் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பரம்பரை ரீதியான சில விஷயங்களால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். அவர்களுக்கு பிடித்த உறவினர் மூலமாகவோ நண்பர்கள் மூலமாகவோ அவர்களை மனம் திறந்து பேசவைக்கும் சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கித் தர வேண்டும். பிள்ளைகள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலமாகவே அறிவது அவசியம். அவர்கள் சொந்த வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் பேசும்போது தேவைப்படும் இடங்களில் ஆதரவாக நம்பிக்கை தரும் விதத்தில் வார்த்தைகளை நீங்கள் கொடுக்க வேண்டும்.

Tags :
|
|