Advertisement

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் ஆப்பிள் பழம்!

By: Monisha Fri, 29 May 2020 1:16:22 PM

கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் ஆப்பிள் பழம்!

ஆப்பிள் பழம் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்கள் ஆப்பிள் பழத்தை தினமும் சாப்பிட வேண்டும்.

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது.

ஆப்பிளில் உள்ள வைட்டமின்-சி, நமக்குத் தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. ஆப்பிள் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் புரைகளைத் தவிர்க்க முடியும்.

apple fruit,health tips,blood pressure,pectin,immunity ,ஆப்பிள் பழம்,ஆரோக்கிய குறிப்பு,ரத்த அழுத்தம்,பெக்டின்,நோயெதிர்ப்பு சக்தி

சிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், தொடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்.

ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதாலும், ஜூஸாக்கி சாப்பிடுவதாலும் உடல் எடை குறைகிறது. ஆப்பிளில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் உள்ள எலும்புகளைப் பாதுகாப்பதில் வல்லவை. எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கின்றன.

ஆப்பிளில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்ட்டின் ஆகியவை சருமத்தைப் பளபளப்பாக வைக்க உதவுகின்றன.

Tags :
|