Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கொரோனாவின் தாக்கம் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா ?

கொரோனாவின் தாக்கம் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா ?

By: Karunakaran Thu, 05 Nov 2020 2:08:39 PM

கொரோனாவின் தாக்கம் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா ?

பள்ளிக்கு செல்லும் போது, குழந்தைகளுக்கு கல்வி மட்டும் கிடைப்பதில்லை. சக நண்பர்களை நேரடியாக காண்பார்கள். பேசுவார்கள். விளையாடுவார்கள். இதனால் அவர்களுக்கு மனோவளர்ச்சி கிடைக்கும். ஆனால் கொரோனா காரணமாக அந்த வாய்ப்பை குழந்தைகள் இழந்துள்ளனர். அந்த ஏமாற்றம் தொடக்க நிலைக் கல்வி பயிலும் குழந்தைகளிடம் அதிகமாக தென்படும். அதை பெற்றோர் புரிந்துகொண்டு குழந்தைகளிடம் அதிக கோபம்கொள்ளக்கூடாது.

குறிப்பாக மழலையர் பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு செல்ல முடியாத குழந்தைகளிடம் எப்போதும் படிக்கச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் அவர்கள் பள்ளி திறந்த பின்பும் படிப்பை வெறுக்கும் சூழல் ஏற்படலாம். பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு பயணம், மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில்படுதல் போன்றவை கிடைக்கும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மூளையின் செயல்பாட்டிற்கு மிக முக்கியம்.

children,school,corona impact,corona virus ,குழந்தைகள், பள்ளி, கொரோனா தாக்கம், கொரோனா வைரஸ்

இப்போது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டு முற்றத்திற்கு வருவதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை. பள்ளிகள் இல்லாததால் மைதானங்களிலான விளையாட்டுகளுக்கு பதில் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். அதனால் டிஜிட்டல் அடிக்‌ஷன் எனப்படும் பாதிப்புக்கு நிறைய சிறுவர்-சிறுமியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள்.

எலக்ட்ரானிக் உபகரணங்களோடு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது. முன்பு தினமும் பெருமளவு நேரத்தை குழந்தைகள் பள்ளிகளில் செலவிடுவார்கள். இப்போது முழுநேரத்தையும் அவர்கள் வீடுகளிலேயே செலவிடுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஆசிரியர் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags :
|