Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?...இதோ இருக்கு தீர்வு!

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?...இதோ இருக்கு தீர்வு!

By: Monisha Fri, 03 July 2020 3:59:46 PM

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா?...இதோ இருக்கு தீர்வு!

அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் என்னவென்றால் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.

மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொரியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி செய்யும். பச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை சரி செய்ய உதவுகிறது.

ulcers,bananas,coconut milk,apple juice,health ,அல்சர்,வாழைப்பழம்,தேங்காய் பால்,ஆப்பிள் ஜூஸ்,ஆரோக்கியம்

தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது. தேங்காய் பால் பிடிக்காதவர்கள் தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும், அல்சர் பிரச்சனை சரியாகும்.

ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, அல்சரை சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.

Tags :
|