Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உடல் சோர்ந்து போய் இருக்கிறீர்களா... மூலிகை பொடி குளியல் எடுத்து கொள்ளுங்கள்

உடல் சோர்ந்து போய் இருக்கிறீர்களா... மூலிகை பொடி குளியல் எடுத்து கொள்ளுங்கள்

By: Nagaraj Mon, 31 Aug 2020 08:26:50 AM

உடல் சோர்ந்து போய் இருக்கிறீர்களா... மூலிகை பொடி குளியல் எடுத்து கொள்ளுங்கள்

உடல் சோர்வாக இருக்கிறதா... அப்போ மூலிகை குளியல் எடுத்து செம ப்ரஷ் ஆகிடுங்கள்.

மூலிகைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான மூலிகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிப்பவை. அதேப்போல் மூலிகைகள் பல சரும நோய்த் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு மூலிகைகளை அரைத்து சருமத்தில் தடவி பயன் பெறலாம் அல்லது அவற்றை குளிக்கும் நீரில் சேர்த்து ஊற வைத்து குளிக்கலாம்.

இதனால் சரும பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, மன அழுத்தம், உடல் சோர்வு போன்றவையும் நீங்கும்.

இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

குளியல் பொடி தயாரிக்க தேவையானவை


சோம்பு 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
வெட்டி வேர் 200 கிராம்
அகில் கட்டை 200 கிராம்
சந்தனத் தூள் 300 கிராம்
கார்போக அரிசி 200 கிராம்
தும்மராஷ்டம் 200 கிராம்
விலாமிச்சை 200 கிராம்
கோரைக்கிழங்கு 200 கிராம்
கோஷ்டம் 200 கிராம்
ஏலரிசி 200 கிராம்
பாசிப்பயறு 500 கிராம்

bath powder,fatigue,remover,achilles tendon,sandalwood powder,carbohydrate rice ,
குளியல் பொடி, சோர்வு, நீங்கும், அகில் கட்டை, சந்தனத் தூள், கார்போக அரிசி

செய்முறை: இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும்.

மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

Tags :