Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கெட்ட நீரை வெளியேற்றி ஆரோக்கியத்தை அளிக்கும் அருகம்புல் சாறு

கெட்ட நீரை வெளியேற்றி ஆரோக்கியத்தை அளிக்கும் அருகம்புல் சாறு

By: Nagaraj Fri, 16 June 2023 11:15:23 PM

கெட்ட நீரை வெளியேற்றி ஆரோக்கியத்தை அளிக்கும் அருகம்புல் சாறு

சென்னை: அருகம்புல் சாறு கொடுக்கும் ஆரோக்கியம்... சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.

அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது. உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

அருகம்புல் சாறையும், தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

arugula extract,remedy,cervical,women,nervousness ,அருகம்புல் சாறு, தீர்வு, கர்ப்பப்பை, பெண்கள், நரம்புத்தளர்ச்சி

அருகம்புல் சாறு சிறுநீரக பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் வல்லமை அருகம்புல் சாறுக்கு உண்டு. தோல் வியாதி உள்ளவர்கள் தினமும் காலை மாலை சுடுநீரில் அரை தேக்கரண்டி அருகம்புல் பொடி சேர்த்து குடித்து வந்தால் தோல் பிரச்னை தீரும்.

நரம்புத் தளர்ச்சி மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. கர்ப்பப்பை கோளாறுகளும் நீங்கும்.

Tags :
|
|