Advertisement

தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும் வாழைப் பூ!

By: Monisha Thu, 10 Sept 2020 11:36:29 AM

தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும் வாழைப் பூ!

வாழைப் பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வாழைப் பூ இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத் தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட்கிரகிப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

banana flower,health,fat,sugar level,blood pressure ,வாழைப் பூ,ஆரோக்கியம்,கொழுப்பு,சர்க்கரை அளவு,இரத்த அழுத்தம்

ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற, வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.

மலச்சிக்கலைப் போக்கும், சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் குணம் கிடைக்கும்.

Tags :
|
|