Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்த விளாம்பழம்

இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்த விளாம்பழம்

By: Nagaraj Sat, 29 July 2023 8:20:13 PM

இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்த விளாம்பழம்

சென்னை: பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாக்கும் மருத்துவக்குணம் கொண்டதுதான் விளாம்பழம். இதன் மருத்துவக்குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வெளிர் பச்சை நிற தடித்த ஓட்டினுள் இனிப்புடன் புளிப்பு கலந்த சுவை கொண்ட பழமே விளாம்பழம் ஆகும். இப்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.

bile,bilious cramping,bitterness in the mouth,disorder,hands and feet ,கை கால், பித்த கிறுகிறுப்பு, பித்தம், வாயில் கசப்பு, விளாம்பழம்

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டு பண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதிக்கு விளாம்பழம் நல்ல மருந்து.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தை விருத்தி செய்வதுடன் இதயத்தை பலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. புரதம், வைட்டமின் சி, இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ ஆகிய சத்துகள் நிறைந்திருக்கின்றன.விளாம்பழத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும். வெல்லத்துடன் விளாம்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

Tags :
|