Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் சிறப்பாக செயல்படும் வாழைப்பழத் தோல்

குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் சிறப்பாக செயல்படும் வாழைப்பழத் தோல்

By: Nagaraj Wed, 14 Dec 2022 9:30:02 PM

குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் சிறப்பாக செயல்படும் வாழைப்பழத் தோல்

சென்னை: குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வு நடந்து நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

banana,clean,peel,purify,water , தண்ணீர், வாழைப்பழ தோல்

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். குறிப்பாக ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ஏழ்மை நாடுகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|
|