Advertisement

உடல் சூட்டை தணிக்கும் பேயன் வாழைப்பழம்!

By: Monisha Tue, 15 Dec 2020 09:13:56 AM

உடல் சூட்டை தணிக்கும் பேயன் வாழைப்பழம்!

வாழைப்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நம்முடைய உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் அடங்கியுள்ளன. நம் ஊரில் பலவகையான வாழைப்பழங்கள் பயிரிடப்படுகின்றன. அவற்றில் குறிப்பாக நேந்திரன், சிகப்பு வாழைப்பழம், ரஸ்தாளி, ஏலக்கி, பச்சை வாழைப்பழம், மலைவாழைப்பழம், பேயன் வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், சிங்கன் வாழைப்பழம், மட்டி வாழைப்பழம், கதளி என இன்னும் பல வகைகள் உள்ளன.

ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் முக்கியமான ஒரு வகை வாழைப்பழம் பேயன் வாழைப்பழம். இதனுடைய தோல் மிகவும் கட்டியாக இருக்கும். மஞ்சள் கலரில் காணப்படும். நன்கு பழுத்த பழம் மிகவும் இனிப்பு சுவை கொண்டிருக்கும். சாப்பிட்டால் சாப்பிட்டு கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு சுவை கொண்டது இந்த பேயன் வாழைப்பழம்.

body heat,banana,health,intestinal ulcer,cold problem ,உடல் சூடு,வாழைப்பழம்,ஆரோக்கியம்,குடல் புண்,சளி பிரச்னை

இந்த பேயன் வாழைப்பழம் நம்முடைய உடலில் உள்ள சூட்டை தணிக்க கூடியது. சிலருடைய உடல் அதிக சூடாக இருக்கும். அப்படிபட்டவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் சூடானது குறையும். இந்த பழமானது அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது.

வயிற்று புண் மற்றும் குடல் புண் இருப்பவர்கள் தினமும் ஒரு பேயன் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு இருக்கும் வயிற்று புண் மற்றும் குடல் புண் விரைவில் ஆறும். இந்த பேயன் பழமானது மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக மலசிக்கல் ஏற்பட்டிருக்கும் பெரியவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது மலம் இளகி வெளியேறும்.

குழந்தைகளுக்கு இந்த பழத்தை கொடுத்து வருவதன் மூலம் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் பெறும். வாரத்தில் 2-3 நாள்கள் கொடுக்கலாம். சளி பிரச்னை இருப்பவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட கூடாது. ஏனென்றால் இந்த பழமானது அதிக குளிர்ச்சி தன்மை கொண்டதால் சளி அதிகமாகும்.

Tags :
|
|