Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • சில வகை உணவை மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சில வகை உணவை மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Sat, 29 July 2023 8:25:13 PM

சில வகை உணவை மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: சில வகை உணவை மீனுடன் சாப்பிடுவதை தவிர்க்கலாம் .அப்படிப்பட்ட ஒரு உணவு தான் பாலும் மீனும் இதனை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆபத்தானது என்று சொல்லப்படுகின்றது.
மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. வங்காளம், அசாம் மற்றும் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும்.
அவர்கள் அதிகளவு மீன் உணவுகளை நேசிப்பதை நாம் சில சமயங்களில் வேடிக்கையாக பார்த்திருக்கலாம், இல்லை கேலி கூட செய்திருக்கலாம். ஆனால் மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவது முக்கியமானது.

diet,fish,medical specialists,omega,skin problem community-verified icon ,உணவு, ஒமேகா, சரும பிரச்னை, மருத்துவ நிபுணர்கள், மீன்

ஆனால் மீன் சாப்பிடும்போது நாம் சில வகை உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .மீன் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுத்து ஒமேகா 3 என்ற சத்தையும் கொடுக்கிறது .

அதனால் உடல் ஆரோக்கியத்துக்கு அடிக்கடி சிலவகை மீன்களை சமைத்து சாப்பிட்டால் நலம் ..சில வகை உணவை மீனுடன் சாப்பிடுவதை தவிர்க்கலாம் .அப்படிப்பட்ட ஒரு உணவு தான் பாலும் மீனும் இதனை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆபத்தானது என்று சொல்லப்படுகின்றது.

ஆயுர்வதத்தின் படி மீன் என்பது அசைவ உணவை சேர்ந்தது, பாலானது விலங்கிலிருந்து பெறப்படும் பொருளாக இருந்தாலும் அது சைவ உணவுவகையை சார்ந்தது இதனால் இந்த இரண்டு உணவையும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது கூறுகின்றது.

மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

Tags :
|
|
|