Advertisement

ஆப்பிளின் நன்மைகள்

By: vaithegi Sat, 11 June 2022 11:32:11 PM

ஆப்பிளின்  நன்மைகள்

வருடத்தில் எந்த சீசன் வந்தாலும் ஒரு பழத்தின் தேவையும், அதன் சத்துக்களும் மக்களுக்கு அதிகப்படியாக நன்மை அளிக்கக்கூடியது. அதில் ஆப்பிள் ஒரு சிறந்த பழமாகும்.
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் மருத்துவ உபாதைகள் வராமல் முற்றிலுமாக தவிர்க்கலாம்.

ஆப்பிள்களில், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்ட ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமே இருக்கிறது. அவை பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் மற்றும் பல வகையான புற்றுநோய்களில் இருந்து நம்மைத் காப்பாற்றுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆப்பிள் ஒரு சிறந்த பழம் என கருதப்படுகிறது.

ஆப்பிள்கள் கரையாத மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்தால் ஆனது – 64% கரையாதது, 36% கரையக்கூடியது. கரையக்கூடியது, உங்கள் மலத்தில் ஒரு ஜெல் போன்ற நிலைத்தன்மையை உருவாக்குகிறது,

லத்தின் பெரும்பகுதியை அதிகரிக்கிறது மற்றும் குடல் வழியாக விரைவாகச் செல்ல உதவி மலச்சிக்கலைப் போக செய்கிறது.

Tags :
|
|