Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவின் பயன்கள்

மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவின் பயன்கள்

By: Nagaraj Wed, 27 July 2022 10:35:25 PM

மக்னீசியம் சத்துக்கள் நிறைந்த வாழைப்பூவின் பயன்கள்

சென்னை: வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவைதான். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அது குறித்து தெரிந்து கொள்வோம்.

அதிலும் வாழைப்பூ மிகவும் மருத்துவ குணம் நிரம்பியது. வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி 1, வைட்டமின் சி நிறைந்துள்ளன. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால், உடலில் பல நோய்கள் குணமாகும். வாழைப்பூ, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கிறது.
இதனால், ரத்தத்தின் அடர்த்தியைச் சரியாகப் பராமரிக்கும். ரத்த ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தம், ரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

வாய்ப் புண்ணைப் போக்கி, வாய் துர்நாற்றத்தையும் நீக்கும். செரிமானத்தன்மையை மேம்படுத்தும். வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், வாழைப்பூவில் உப்பு சேர்த்து வேக வைத்து அதன் சாற்றைக் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும்.

banana flower,medicinal,bleeding,restraining,through the blood ,வாழைப்பூ, அருமருந்து, ரத்தப்போக்கு, கட்டுப்படுத்தும், ரத்த மூலம்

வாழைப்பூவில் துவர்ப்புத் தன்மை அதிகம் உள்ளதால், ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையைக் கரைத்து, உடலின் சர்க்கரை அளவை சமன்செய்கிறது. மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்குச் சிறந்த மருந்தாக வாழைப்பூ பயன்படுகிறது. மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியையும் கட்டுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூ அருமருந்து.

Tags :