Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த வெற்றிலையின் பயன்கள்

கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த வெற்றிலையின் பயன்கள்

By: Nagaraj Mon, 01 Aug 2022 11:17:27 PM

கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த வெற்றிலையின் பயன்கள்

சென்னை: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. வெற்றிலை நன்கு கசக்கி அதன் சாறு துளிகள் எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினால் தலைபாரம் மற்றும் சளி கரையும். வெற்றிலை ஒரு வலுவான, காரமான மற்றும் நறுமண வாசனையைக் கொண்டுள்ளது, மேலும் இது வாய் புத்துணர்ச்சியூட்டலாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

durwadai problem,betel leaf,medicinal properties,diseases,will be removed ,துர்வாடை பிரச்னை, வெற்றிலை, மருத்துவ குணம், நோய்கள், நீங்கும்

வெற்றிலையில் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் வெற்றிலை மற்றும் சாவிகோல், பீட்டல்பீனால், யூஜெனால், டெர்பீன் மற்றும் கேம்பீன் போன்ற இரசாயன கூறுகள் உள்ளன. பொதுவாக இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை. வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.

வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகிவரும்.

Tags :