Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அதிக நார்ச்சத்துகள் நிறைந்த கைக்குத்தல் அரிசியில் கிடைக்கும் நன்மைகள்

அதிக நார்ச்சத்துகள் நிறைந்த கைக்குத்தல் அரிசியில் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Wed, 22 Feb 2023 9:21:35 PM

அதிக நார்ச்சத்துகள் நிறைந்த கைக்குத்தல் அரிசியில் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: தினமும் கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதால் அதில் உள்ள செலினியம் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்ககூடிய தன்மை உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

அதனால் மிகவிரைவில் செரிமானம் அடைய உதவுகிறது. மேலும் தினமும் கைக்குத்தல் அரிசி சோறு சாப்பிட்டால் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கைக்குத்தல் அரிசியில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இரண்டு வகை நீரிழிவு நோயை சீராக காத்துக்கொள்ள கைக்குத்தல் அரிசி பயனுள்ளதாக இருக்கிறது.

cancer,digestion,fiber,rice,selenium ,அரிசி, செரிமானம், செலினியம், நார்ச்சத்து, புற்றுநோய்

தினமும் கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் ஆஸ்துமா நோயை குறைக்கிறது. மேலும் இதில் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. இவற்றை தினமும் சாப்பிட்டால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாகுவதை தடுக்க உதவுகிறது.

கைக்குத்தல் அரிசியில் 21% மெக்னீசியம் உள்ளதால் தினமும் ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிடுவதால் நம் எலும்புகள் மிகவும் பலமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. கைக்குத்தல் அரிசியில் இருக்கும் தவுட்டில் கிடைக்கும் எண்ணெய் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடலை மெலிதாக காட்டுகிறது.

மேலும் இதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் லிக்னான் மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய் இரண்டையும் காத்துக் கொள்ள உதவுகிறது.

Tags :
|
|
|