Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புரோட்டீன், பீட்டா, கரோட்டின் நிறைந்த முந்திரி பழம் அளிக்கும் நன்மைகள்

புரோட்டீன், பீட்டா, கரோட்டின் நிறைந்த முந்திரி பழம் அளிக்கும் நன்மைகள்

By: Nagaraj Sat, 05 Aug 2023 11:31:14 PM

புரோட்டீன், பீட்டா, கரோட்டின் நிறைந்த முந்திரி பழம் அளிக்கும் நன்மைகள்

சென்னை: முந்திரி பழத்தை சாப்பிட்டால் நம்பமுடியாத பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். முந்திரி பழத்தில் புரோட்டீன், பீட்டா, கரோட்டின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நார்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி அதிகம் இருக்கும்.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள் முந்திரிப் பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். முந்திரிப் பழத்தை மரத்திலிருந்து பறித்து 24 மணி நேரத்திற்குள் கட்டாயம் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அது அழுகி விடும். அதனால் இப்பழம் இந்தியாவில் மிகவும் விற்கப்படுவதில்லை.

benefits,cashew fruit,constipation,immunity, ,நன்மைகள், நோய் எதிர்ப்பு, மலச்சிக்கல் போக்கும், முந்திரி பழம்

இதன் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலம். இதை சாப்பிட்டால் நுரையீரல் செயல்பாடு சீராக இருக்கும். இதயத்தை காப்பதற்கு இது உதவுகிறது. எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது.

கல்லீரலை சுத்தப்படுத்த உதவும். கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புற்றுநோயை தடைசெய்யும். மலச்சிக்கலைப் போக்குகிறது. தேச பராமரிப்பிற்கு இது அதிக அளவில் உதவுகிறது.

Tags :