Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பிராணாயாமம் தொடர்ந்து செய்துவரும்போது கிடைக்கும் நன்மைகள்

பிராணாயாமம் தொடர்ந்து செய்துவரும்போது கிடைக்கும் நன்மைகள்

By: Karunakaran Wed, 25 Nov 2020 12:37:34 PM

பிராணாயாமம் தொடர்ந்து செய்துவரும்போது கிடைக்கும் நன்மைகள்

பிராணாயாமம் என்றால் நம் அடிப்படை சக்திகளை கட்டுப்படுத்துவதே பிராணாயாமம். கட்டுப்பாடு என்றால் என் உடலில் மட்டுமல்ல, எனக்கு எங்கு வேண்டுமோ அங்கு சக்தியை செலுத்த முடியும், உலகில் எங்கு வேண்டுமானாலும் என் சக்தியை எடுத்துச் செல்லலாம். துவக்கத்தில் மூச்சினை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றோம். அதன்பின் சக்தியின் மீது முழுமையான ஆளுமை எடுத்து வருகிறோம். மூச்சு ஒரு கருவி மட்டுமே. சுவாசத்தை பயன்படுத்தாமலேயே சக்தியை நாம் கட்டுப்படுத்த முடியும்.

சக்திநிலையின் மீது கொண்டுவரும் கட்டுப்பாட்டிற்கும் மூச்சிற்கும் சம்பந்தம் இல்லை. ஆரம்பக் கட்டத்தில் சுவாசத்தை ஒரு கருவியாக நாம் பயன்படுத்துகிறோம். அதனால், பிராணாயாமம் என்பது காலையிலும் மாலையிலும் மட்டும் செய்யும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.

15 நிமிடம் சூன்ய தியானம் செய்துவிட்டு உணவு உண்டு பாருங்கள், உணவு வயிறு வரைச் செல்வதை உணரலாம். தியானம் செய்வதன் மூலம் தினசரி நீங்கள் உண்ணும் உணவினையே உங்களால் ஆழமாக உணர முடிகிறது. இதனால் உணவு வெறுமனே சதையாக மட்டும் ஆகிவிடாமல்
சூட்சும சக்தியாக மாறும். பிராணாயாமம் செய்யத் துவங்கியவுடன் சிலருக்கு எடை குறையும் வேறு சிலருக்கோ எடை கூடும். இதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.

yoga,pranayama,breath,good air ,யோகா, பிராணயாமா, மூச்சு, நல்ல காற்று

உங்கள் ஜீரண சக்தி மந்தமாக இருந்தால் உணவை உடலாக மாற்றக்கூடிய திறன் குறைப்பாட்டுடன் உள்ளது என்று அர்த்தம். பிராணாயாமப் பயிற்சி துவங்கியவுடன் ஜீரண சக்தி அதிகரிப்பதை உணரலாம். இதனால் உணவை சதையாக மாற்றும் உங்கள் திறனும் அதிகரிக்கலாம். உணவினை வெறுமனே கழிவாக வெளியேற்றும் தேவை குறைந்து போகலாம். இதனால் உங்கள் உடல் எடை கூடலாம். அதுவே உங்கள் ஜீரண மண்டலம் நன்றாக செயல்படும்போது நீங்கள் பிராணாயாமம் செய்யத் துவங்கினால் தாங்கள் உண்ணும் உணவு வேறொரு சூட்சும சக்தியாக உருமாற்றம் அடையும்.

இப்போது நீங்கள் உடல் எடையை இழக்கத் துவங்குவீர்கள். எத்தனை உணவு உண்டாலும் உடல் எடை குறைவதை கவனிக்க முடியும். உணவை மற்றொரு பரிமாணமாக மாற்றும் உங்கள் திறன் மிகுதியாக இருப்பதால் நீங்கள் எவ்வளவு உண்கிறீர்கள் என்பதற்கு கணக்கே இருக்காது. நீங்கள் பிராணாயாமத்தை துவங்கும்போது ஒன்று உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் அல்லது குறைந்துபோகும் இதனை நீங்கள் கவனிக்கலாம். ஒரு வகையில் பார்த்தால், நீங்கள் கேட்பது போலவே பிராணாயாமம் என்பது கடைசி மூச்சிற்கும் அதற்கு அப்பாலும் உள்ள பரிமாணத்திற்கு ஒரு தயாரிப்பு என்றே சொல்லலாம்

Tags :
|
|