Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • செம்பு பாத்திரத்தால் கிடைக்கும் நன்மைகள்... தெரிந்து கொள்ளுங்கள்

செம்பு பாத்திரத்தால் கிடைக்கும் நன்மைகள்... தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Mon, 03 Apr 2023 11:22:49 PM

செம்பு பாத்திரத்தால் கிடைக்கும் நன்மைகள்... தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: முன்னோர்கள் உணவை சமைப்பதற்கும், சேமிப்பதற்கும் அதிகமாக செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினர். செம்பு பாத்திரங்களில் தண்ணீரை சேமித்து குடித்து வந்தனர். காலத்தின் மாற்றம் மற்றும் நாகரீக மோகம் செப்பு பாத்திரங்களை புழக்கத்தில் இருந்து வெளியேற்றியது. பிளாஸ்டிக் பொருட்கள் அவற்றின் இடத்தைப் பிடித்துள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், பெரும்பாலானோர் மீண்டும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்த துவங்கி உள்ளனர். மேலை நாடுகளில் கூட செப்புப் பாத்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. குடிநீர் பாட்டில்கள், சமையல் பாத்திரங்கள், உணவு சேமிப்பு பாத்திரங்கள் என செம்பு பாத்திரங்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.

copper,ever silver,vessels, ,தண்ணீர், தாமிர பாத்திரத்தில், முன்னோர்கள்

தாமிரம் ஒரு நுண்ணூட்டச் சத்து. இது ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இது புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது. “செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்த தண்ணீரை குடித்தால் உடல் குளிர்ச்சியடையும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அமிலம் மற்றும் கார சமநிலையை பராமரிக்கும்.உணவுகள், சமையல் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை செம்பு பாத்திரங்களில் சேமிக்கலாம். இரவில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு காலையில் குடியுங்கள்” என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தாமிர பாத்திரங்களை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். சிறந்த ஆக்சிஜனேற்றமாகவும் செயல்படுகிறது. நச்சுக்களை நீக்குகிறது. இது உணவுப் பொருட்களில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

Tags :
|