Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Mon, 21 Aug 2023 6:42:55 PM

உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன . உலர்திராட்சை ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்வதற்காக பயன்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் என 3 நிறங்களில் கிடைக்கிறது.

இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை யாரும் எந்த பயமும் இன்றி சாப்பிடலாம்.

இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

உலர் திராட்சை நீரை குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் சீராகும். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், குடலின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இதனால் குடலில் உள்ள பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்துகிறது. உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால், நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை தூய்மைபடுத்துகிறது.

raisins,sleeplessness,soaked water,flow of blood ,உலர் திராட்சை, தூக்கமின்மை, ஊற வைத்த நீர், ரத்த ஓட்டம்

வாரம் ஒரு முறையாவது இந்த நீரை குடித்தால் தான் இதய நோய் வரும் ஆபத்து குறையும். அத்துடன் கல்லீரலையும் சுத்தப்படுத்தி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும். உலர் திராட்சை ஊற வைத்த நீரில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பல நோய்களிலிருந்து உங்களை காக்கிறது. அதோடு உங்களின் செரிமான ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது.

உலர் திரட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வு தடுக்கப்படுகிறது. இன்றைய காலத்தில் பலரும் தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, இதிலிருக்கும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோனான மெலடோனின் காரணமாக தூக்கமின்மை பிரச்சனையை தடுத்து நல்ல தூக்கத்தை வரவழைக்கிறது.

Tags :