Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கிரீன் டீயுடன் இவற்றை சேர்த்து குடிக்கும் போது கிடைக்கும் நன்மைகள்

கிரீன் டீயுடன் இவற்றை சேர்த்து குடிக்கும் போது கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Wed, 25 Jan 2023 10:11:42 PM

கிரீன் டீயுடன் இவற்றை சேர்த்து குடிக்கும் போது கிடைக்கும் நன்மைகள்

சென்னை: எடை குறைக்கும் உணவில் கிரீன் டீ-க்கு முக்கிய பங்கு உள்ளது. இது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்குகிறது. கிரீன் டீ குறைந்த கலோரி கொண்ட டீயாகும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ளலாம்.

இருப்பினும், கிரீன் டீயில் சில விஷயங்களை சேர்ப்பதால் கிடைக்கும் பல நன்மைகள் கிரீன் டீ-ஐ வெறுமனே குடிப்பதால் கிடைப்பதில்லை. க்ரீன் டீயில் கலந்து குடிக்கக்கூடிய சில விஷயங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை கிரீன் டீ-யில் சேர்ப்பது கொழுப்பை எரிப்பதில் உதவுவதோடு, சுவையை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை: எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சியை கிரீன் டீயில் சேர்க்கும்போது கொழுப்பு இழப்பு வேகமாக நடக்கத் தொடங்குகிறது. இந்த டீயை தினமும் ஒரு கப் குடித்தால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும். இந்த டீயை தயாரித்த பிறகு, 15 நிமிடம் வெந்நீரில் வைத்து, லேசாக சூடுபடுத்தி குடிக்கவும். இந்த டீ குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.

mint,green tea,tea,weight loss,rejuvenation ,புதினா, கிரீன்டீ, தேநீர், உடல் எடை, குறையும், புத்துணர்ச்சி

இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள்: மசாலாப் பொருட்களின் மருத்துவ குணங்களைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதத்திலும் அவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள் ஆகியவை கிரீன் டீயுடன் சேர்க்கக்கூடிய இரண்டு மசாலாப் பொருட்களாகும். ஒரு கப் கிரீன் டீ தயாரிக்க, அரை டீஸ்பூன் மஞ்சள் மற்றும் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மட்டுமே பயன்படுத்தவும்.

புதினா: குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும் புதினா, பசியைக் குறைத்து எடை குறைப்பதில் நன்மை பயக்கும். இந்த காரணத்திற்காக, அதை கிரீன் டீயுடன் கலந்து குடிக்கலாம். ஒரு கப் க்ரீன் டீ தயாரிக்கும் போது, புதினா இலைகளை நேரடியாகச் சேர்த்து அல்லது லேசாக அரைத்து சேர்க்கலாம். அதன் பிறகு இந்த தேநீரை அருந்தவும்.

Tags :
|
|