Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Sun, 12 June 2022 3:32:03 PM

வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா கிடைக்கும் நன்மைகள் அதிகம். இதுகுறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலையில் எழுந்ததும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கத்தை அன்றாடம் மேற்கொள்வார்கள். அதில் பெரும்பாலானோர் டீ அல்லது காபி குடிப்பதாக கூறுவர். ஆனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்து குடிப்பார்கள்.

ஆனால் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? பல ஆய்வுகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் படி, காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாக கூறுகின்றன.

ghee,just belly,tenderness,skin,radiance,visibility ,நெய், வெறும் வயிறு, மென்மை, சருமம், பொலிவு, காட்சியளிக்கும்

அதுவும் அதிகாலையில் ஒரு ஸ்பூன் நெய் உட்கொண்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால், நாம் நினைத்திராத அளவில் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆயுர்வேதத்தின் படி, நெய்யை ஒருவர் வெறும் வயிற்றில் எடுக்கும் போது, அது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஊட்டமளித்து சீராக இயங்கச் செய்யுமாம். ஆகவே உடற்செல்கள் புத்துணர்ச்சி பெறவும், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்.

சரும செல்களை ஆரோக்கியமாகவும், புத்துணர்வுடனும் வைத்துக் கொள்ளும் திறன் நெய்க்கு உள்ளது. ஒருவரது உடலில் செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சருமம் பொலிவோடு காட்சியளிக்கும். முக்கியமாக சருமம் வறட்சியடையாமல் மென்மையாக இருக்கும். அதுமட்டுமின்றி சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளும் குணமாகும்.

Tags :
|
|