Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Tue, 15 Nov 2022 10:34:46 PM

நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: அழகு மற்றும் ஆரோக்கியம் குறித்த பல வித பிரச்சனைகளுக்கும் நெல்லிக்காய் அற்புதமான மருந்தாக உள்ளது.


நெல்லிக்காய் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதனில் வைட்டமின் - C அதிக அளவில் உள்ளது. ஆரஞ்சு பழங்களை விட, எட்டு மடங்கு வைட்டமின் - C அதிகமுள்ளது. இலவங்கப்பட்டை தூளை விட இரண்டு மடங்கு ஆக்சிஜனேற்ற பண்பு அதிகம் கொண்டது. அதனால் தான் நெல்லிக்காயினை அற்புதமான மருந்து என்று நாம் அழைக்கிறோம்.


நெல்லிக்காயை வழக்கமாக சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆயுர்வேதத்தின்படி, சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ள நெல்லிக்காய் உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், கண் பார்வை மேம்படவும் நெல்லிக்காய் பயன்படுகிறது.

நெல்லிக்காய் செரிமான மேம்பாட்டுக்கும், அசிடிட்டி பிரச்சனைக்கும் உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால், சர்க்கரை வியாதிக்கும் நன்மருந்தாக உள்ளது. மேலும் வயதான தோற்றத்துடன் தெரிவதை தடுக்கவும், முடி நரைத்து போகாமல் பார்த்துக்கொள்ளவும் நெல்லிக்காய் உதவுகிறது.

hair growth,gooseberry,roots,hair loss,trait ,முடி வளர்ச்சி, நெல்லிக்காய், வேர்கால்கள், முடி உதிர்தல், பண்பு

நெல்லிக்காயினை பச்சையாகவோ, ஜூஸாகவோ, சட்னியாகவோ, மிட்டாய் ஆகவோ நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். எப்படி எடுத்துக்கொண்டாலும், இதன் பலன்கள் மாறுவதில்லை. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து தான் பார்க்கவிருக்கிறோம்.


பண்டைய காலம் முதலே எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் சாப்பிட்டு வரப்பட்டது. இதனை கொண்டு சட்னி, ஊறுகாய் போன்றவை செய்து பெண்கள் சாப்பிட்டனர். நெல்லிக்காயில் வைட்டமின் - C சிறந்த அளவில் உள்ளது.

வைட்டமின் - C, ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. ஆய்வின்படி தெரியவருவது என்னவென்றால், நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர, ஜலதோஷ பிரச்சனை நீங்கும் என்கிறது. இதனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மற்றும் துவர்ப்பு பண்பு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, முடி உதிர்தல் குறையும், முடி வளர்ச்சிக்கு உதவும். நெல்லிக்காயில் உள்ள தனித்துவமிக்க பண்பு முடி நரைத்து போவதை தடுக்கும். நெல்லிக்காய் முடி உதிர்வதையும் தடுக்கும். முடியின் வேர்க்கால்களை தூண்டுவதன் மூலமாக முடி வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும்.

Tags :
|