Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பெண்கள் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பெண்கள் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Fri, 27 Jan 2023 10:43:48 PM

பெண்கள் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: வெல்லத்தின் நன்மைகள் ஏராளம் தாராளம். அவற்றின் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். குறிப்பாக வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இரும்புச் சத்து வெல்லத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். சித்த மருத்துவத்தில் சில நோய்களுக்கான மருந்தில் வெல்லத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது.

வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது. அதனால்தான் உணவு உண்ட பிறகு ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள் பலரும். செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு உண்டு.

jaggery,folic acid,iron,calcium,selenium ,வெல்லம், போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம்

வெல்லம் நம் இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய இயற்கை இனிப்பு ஆகும். பழங்காலத்திலிருந்தே, வெல்லம் சமையலறையில் மட்டுமல்ல, ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. வெல்லத்தில் ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் எல்லாம் நம் உடலில் ஏற்படும் பல நோய்களை தடுக்கிறது.

ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு பதில் வெல்லம் நல்ல மாற்றா? சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட இது இயற்கையானது என்று ஏன் நினைக்கிறோம்? இந்தக் கூற்றை ஆராய்ந்து, வெல்லத்தின் ஊட்டச்சத்து மதிப்பை சிறப்பாக ஆராய்ந்து, சர்க்கரையுடன் ஒப்பிடலாம்.

Tags :
|