Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

By: vaithegi Wed, 23 Nov 2022 06:53:59 AM

பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


பிண்ணாக்குக் கீரை நன்மைகள் ..... கீரை வகைகளில் ஒன்று தான் பிண்ணாக்குக் கீரை .மாட்டுக்கு பால் சுரப்பதற்கு உதவும் தீவனப் பொருள்களில் ஒன்றான பிண்ணாக்கு (பருத்திக் கொட்டை, கடலைப் பிண்ணாக்கு) போல், இந்த செடியும் மாடுகளுக்கு பால் சுரப்பதற்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய வாத, பித்த கோளாறுகளை நீக்க கூடியதாக இருப்பதால் இந்த கீரை பிண்ணாக்குக் கீரை என்று அழைக்கப்படுகிறது.

இதனை அடுத்து பிண்ணாக்குக் கீரை உடலில் ஏற்படும் வாய்வுத் தொல்லைகளை குணப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டுள்ளது. பிண்ணாக்குக் கீரையை அரைத்து அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து, கால் ஆணி ஏற்பட்ட இடங்களில் போட்டு வந்தால் கால் ஆணி மறையும். பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் கால் வீக்கம் குணமாகும்.

spinach for spinach,benefits ,பிண்ணாக்குக் கீரை,நன்மைகள்

பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு குணமாகும். பிண்ணாக்குக் கீரை சாறு எடுத்து, அதில் கடுக்காய்த் தோலை ஊறப்போட்டு, உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும். வயிற்றுப் பிரச்சனை, குடல் போன்ற பிரச்சனைகள் நீங்கி உணவு நன்கு செரிமானம் ஆகும். மேலும் பிண்ணாக்குக் கீரை சாற்றில் அதிமதுரத்தை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் நல்ல குரல் வளம் உண்டாகும். தொண்டையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.

Tags :