Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உண்ணக்கூடிய தங்கம் சுரைக்காய் அளிக்கும் நன்மைகள்

உண்ணக்கூடிய தங்கம் சுரைக்காய் அளிக்கும் நன்மைகள்

By: Nagaraj Tue, 14 Nov 2023 1:24:47 PM

உண்ணக்கூடிய தங்கம் சுரைக்காய் அளிக்கும் நன்மைகள்

சென்னை: சுரைக்காயை உண்ணக்கூடிய தங்கம் என்று குறிப்பிடலாம். உங்களை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ள சுரைக்காயை பற்றி தெரிந்துகொள்வோம்.

பாகற்காய்க்கு அடுத்தபடியாக, பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் வெறுக்கக் கூடிய காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. இன்றைய பதிவை முழுமையாக படித்த பிறகு, சுரைக்காயை இனி ஒதுக்காமல் சாப்பிட தொடங்குவீர்கள். இந்த எளிய காயில் இத்தனை ஊட்டச்சத்துக்களா, என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

100 கிராம் சுரைக்காயில் 15 கலோரிகள் மட்டுமே உள்ளன. சுரைக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் C, ரிபோஃப்ளேவின், துத்தநாகம், தயமின், இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உள்ளது.

fatigue,prevention,zucchini,refreshment,hydration,weight ,சோர்வு, தடுக்கும், சுரைக்காய், புத்துணர்வு, நீர்ச்சத்து, உடல் எடை

சுரைக்காயில் கரையக்கூடிய மற்றும் கரையாத உணவு நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது பைல்ஸ், வாயு மற்றும் மலச்சிக்கலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எளிதில் ஜீரணமாகும்.

சுரைக்காய் எடை இழப்புக்கு உதவும். காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிக்கும்போது, உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்களை பெறலாம் மற்றும் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தலாம்.

இதில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக உள்ளது. சுரைக்காயில் கிட்டத்தட்ட 96% நீர்ச்சத்து இருப்பதால், உங்கள் தாகத்தை தீர்க்க இது ஒரு சிறந்த வழியாகும். கூடுதலாக, இது உடல் சோர்வடைவதையும் தடுக்கிறது. உடலை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கவும், சோர்வைத் தடுக்கவும் சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Tags :