Advertisement

வெந்தயத்தின் பயன்கள்

By: vaithegi Sun, 26 Nov 2023 10:30:06 AM

வெந்தயத்தின் பயன்கள்

தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.

குளிர்ச்சி தரும் வெந்தயம் வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். ...
வயிறு வலி குணமாகும் ...
உடல் உஷ்ணம் குணமடையும் ...
வயிற்று வலி தீரும் ...
மாத விடாய் பிரச்சினை ...
முடி உதிர்வு பிரச்சினை ...
உடல் நாற்றம் நீங்கும் ...
உடலுக்கு வலிமை தரும் வெந்தயக்கீரை

1.சிலருக்கு வயிற்றில் இரைச்சல் இருக்கும் .இப்படி இருந்தால், கொதிக்கும் நீரில் கொஞ்சம் ஓமம் போட்டு மூடி வையுங்கள். சிறிது நேரம் கழித்து வடிகட்டி பாலையும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிற்று இரைச்சல் நின்றுவிடும்.

2.சில குழந்தைக்கு வயிற்றில் பூச்சியிருக்கும் .அப்போது கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு டீஸ்பூன் அளவிற்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க குடற்பூச்சிகள் முழுவதும் அன்றே வெளிவந்துவிடும்.

uses,dill ,பயன்கள் ,வெந்தயம்


3.சிலருக்கு முகப்பரு இருக்கும் ., அதனால் ஏற்படும் தழும்புகளும் இயற்கை. அது என்னதான் மேக்-அப் போட்டாலும் போகாத தழும்புகள் என்பது ஏறக்குறைய மருத்துவ உண்மை. ஆனால் சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.

4.வெந்தயம் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட சிறந்த மருந்தாகும். வெந்தயத்தை அரைத்து பேஸ்டாக தயாரித்து முகத்தில் மாஸ்க் போல நீவி தடவ அந்த தழும்புகள் போய் விடும் .

5. முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளை ஒழித்துக் கட்ட வெந்தய விதைகளை நன்றாக கொதிக்கவிட்டு, பிறகு அரைத்து கூலான இடத்தில் வைக்கவும். இதனை தழும்புகள் மீது தடவி 15 அல்லது 20 நிமிடம் உலர விடவும். பிறகு ஜில் தண்ணீரில் முகத்தை அலம்பவும்.

6.அடுத்து எலுமிச்சை சாறை எடுத்துக்கொள்ளவும், பஞ்சை அதில் நனைத்து பருக்கள் தழும்புகள் மீது தடவவும். சிறிது நேரம் கழித்து மிதமான கொதிநீரில் முகத்தை அலம்பவும். எலுமிச்சை கரும்புள்ளிகளை போக்கவும் சிறந்த மருந்தாகும்.

7.அடுத்து சந்தனம் மற்றும் பன்னீரைக் கலந்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளலாம். ஒரு மணிநேரம் கழித்து பிறகு அலம்ப ஆரோக்கியம் கிடைக்கும்

8.ஆலிவ் எண்ணெய்யை ரெகுலராக முகத்தில் தடவி வந்தால் ஏற்கனவே உள்ள பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் உருவக்கத்தையே தடுத்து ஆரோக்கியம் உண்டாகும்

Tags :
|