Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்புக்கு பொது மருந்தாகும் வெந்தயத்தின் நன்மைகள்

நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்புக்கு பொது மருந்தாகும் வெந்தயத்தின் நன்மைகள்

By: Nagaraj Fri, 29 Sept 2023 06:49:05 AM

நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்புக்கு பொது மருந்தாகும்  வெந்தயத்தின் நன்மைகள்

சென்னை: வெந்தயத்தில் இருக்கும் அபரிமிதமான பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் உப்பு சத்தை மாற்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

வெந்தயம் சைவ உணவுகளில் நார்ச்சத்து கொண்ட பொருள். சாம்பார், இட்லி, ரசம் என நாம் சமைக்கும் அனைத்து உணவிலும் வெந்தயம் சேர்ப்பது நல்லது. அளவுக்கு அதிகமாக உபயோகித்தால் கசப்பு தன்மை அதிகரிக்கும்.

நீரிழிவு, ரத்த கொதிப்பு, மாரடைப்பு ஆகிய மூன்று நோயுக்கும் ஒரு பொது மருந்தாகும் வெந்தயம் விளங்குகிறது. வெந்தயக் கீரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

fenugreek,cures,sedapethi,bethi,blood pressure,ghee ,வெந்தயம், குணமாகும், சீதபேதி, பேதி, ரத்த அழுத்தம், நெய்

இரண்டு அவுன்ஸ் அளவு வெந்தயத்தை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்வதால் கெட்ட கொழுப்பு, சத்தான எல்.டி.எல் கொலஸ்ட்ரால் குறைந்துவிடும் என்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

வெந்தயத்தை மோரில் ஊற வைத்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்பாக இருப்பதுடன் கண்ணிற்கும் குளிர்ச்சியாக இருக்கும். இதனால் பொடுகு தொல்லை விரைவிலே குணமாகும்.

10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சிறிது சோம்பு சேர்த்து அதனோடு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து கொடுக்க பேதி, சீதபேதி ஆகியன குணமாகும்.

Tags :
|
|