Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த ஆளி விதை அளிக்கும் நன்மைகள்

ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த ஆளி விதை அளிக்கும் நன்மைகள்

By: Nagaraj Fri, 14 Oct 2022 11:57:46 PM

ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த ஆளி விதை அளிக்கும் நன்மைகள்

சென்னை: ஆளி விதையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது இதை சரியான அளவு எடுத்துக்கொண்டால் அதிகளவு பசி எடுக்காது. ஆளி விதையில் அதிக அளவு ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன. இது நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும்.

உடல் எடையை கச்சிதமாக வைத்துக் கொள்ள இந்த ஆளி விதை உதவுகிறது. இதில் இருக்கும் நார் சத்தானது உடலில் கெட்ட கொழுப்பு சேராது தடுத்து பக்கவாதம், இதயநோய் வராமல் தடுக்கின்றது.

disorders,fiber,flaxseed,hair loss,headache , ஆளி விதை, கோளாறுகள், தலைவலி, நார்ச்சத்து, முடி உதிர்வு

பெண்களுக்கு முடி பிரச்சனையை தீர்க்கிறது. பெண்களுக்கு ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மன உளைச்சல் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக இந்த ஆளிவிதை உதவுகிறது.

இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வை தடுக்கும் முடி வளர உதவும். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வயிற்றுவலி, பதற்றம், தலைவலி போன்றவற்றை கட்டுப்படுத்தும். ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும். ஆளி விதையானது அதிக நார்ச்சத்து கொண்டதால் இதை ஒரேயடியாக உணவில் சேர்த்து சாப்பிடக்கூடாது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது சாப்பிடும் நாட்கள் அதிகமாக தண்ணீரை பருக வேண்டும்.

Tags :
|