Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Mon, 07 Sept 2020 5:06:43 PM

காலையில் எழுந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எத்தனை நன்மைகள்... காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே உடலில் பாதி பிரச்னைகள் சரியாகி விடும். பெரும்பாலாக உடல் பிரச்னைகள், நோய்கள் நமது வயிற்றில் இருந்துதான் தோன்றுகின்றன.

வயிற்றை சுத்தமாக வைத்துக்கொண்டாலே உடலியல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். அவ்வாறு வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது அவசியம்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் முதலில் வயிற்றில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. குடல் சுத்தமாகிறது. இதனால் தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் மலம் கழிக்க முடிகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கு உடலில் உள்ள கழிவுகளை தினமும் வெளியேற்ற வேண்டும்.

just stomach,water,face radiance,blood flow,function ,வெறும் வயிறு, தண்ணீர், முகம் பொலிவு, ரத்த ஓட்டம், செயல்பாடு

தண்ணீரானது உடல் முழுவதும் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுவதால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது. பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதாலே பின்னாளில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால், உடலில் நீர்ச்சத்தை சரியான அளவில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடல் எடை குறையும். உணவு செரிமானத்தைத் தூண்டும். அதே போன்று சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னும் சூடான/வெதுவெதுப்பான நீரை குடிப்பது மிகவும் நல்லது.

அதிகளவு தண்ணீர் குடிப்பதால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். சோர்வான உடலியல் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இயங்கும். இதனால், எந்தவொரு வேலையையும் எளிதாக செய்ய முடியும். மேலும், உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால், ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதாலும் முகமும் பொலிவு பெறும்.

Tags :
|