Advertisement

இஞ்சி சட்னியால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள்

By: Nagaraj Sun, 18 Oct 2020 10:06:19 PM

இஞ்சி சட்னியால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள்

ஜலதோஷம்,சளி, இருமலை கட்டுப்படுத்துகிறது இஞ்சி சட்னி. இஞ்சி ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்தாக பயன்பட்டு வருகிறது. இந்த இஞ்சியில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்


இஞ்சி - 1/2 கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளி - ஒரு கோலி அளவு
வெல்லம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
கடுகு - சிறிதளவு

ginger chutney controls colds,colds,coughs ,இஞ்சி சட்னி, ஜலதோஷம், சளி, இருமல், கட்டுப்படுத்துகிறது

செய்முறை: இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.புளியை சிறிது தண்ணீல் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். சுவையான இஞ்சி சட்னி தயார்.

Tags :
|