Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அடங்களி திராட்சையால் கிடைக்கும் நன்மைகள்

துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அடங்களி திராட்சையால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Tue, 02 May 2023 11:59:12 AM

துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அடங்களி திராட்சையால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: திராட்சையில் பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.

திராட்சையின் வகைகள் ஒன்றா இரண்டா? பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, சிவப்பு திராட்சை என பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் சுவை சிறிய அளவில் மாறுபடும். இதில், மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஆப்பிள், மாதுளையைப் போல காஸ்ட்லி பழம் அல்ல திராட்சை. நியாயமான விலையில் கிடைக்கக் கூடியது

திராட்சை பழங்களின் நன்மைகளை அறிந்தால், அடுத்த முறை மார்க்கெட்டுக்கு செல்லும் பொழுது இதனை தவறாமல் வாங்குவீர்கள். திராட்சையில் பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.

மேலும் வைட்டமின் K, வைட்டமின் C மற்றும் வைட்டமின் B9 போன்ற சத்துக்களும் ஏராளமாக உள்ளன. இது எந்த நேரத்தில் பசி எடுத்தாலும் சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்..

grapes,health,benefits,vitamin,appetite,role ,திராட்சை, உடல்நலன், நன்மைகள், வைட்டமின், பசி, பங்கு

திராட்சையில் நீர்ச்சத்து கொஞ்சம் உண்டு. இது தவிர விட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இந்த சத்துக்கள் உதவியாக இருக்கின்றன.

வெப்ப மண்டல பகுதியில் வாழும் நமக்கு சிறுநீரக கல் உருவாகும் சாத்தியம் அதிகம். ஆனால், திராட்சைப் பழங்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் உருவாகுவது தடுக்கப்படும்.

உடல் எடை குறித்து கவலைப்படுபவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். ஏனென்றல் இதில் கலோரிகள் மிக குறைவு. ஆனால், ஊட்டச்சத்துக்கள் அதிகம். வெயில் காலங்களில் எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் நம் தாகம் அடங்காது. அத்தகைய சூழலில் இனிப்பும், நீர்ச்சத்தும் கொண்ட திராட்சை பழங்களை எடுத்துக் கொண்டால் நம் தாகம் கட்டுக்குள் வரும்.

வெயிலின் கொடுமையினால் நம் சருமம் பாதிக்கப்படுவது குறித்த கவலை உங்களுக்கு இருக்கும். ஆனால், திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள விட்டமின் "சி" சத்து நமது சருமத்திற்கு பாதுகாப்பு தரும். பசியைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் திராட்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

Tags :
|
|