Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்

அதிக அளவு புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலையின் நன்மைகள்

By: vaithegi Thu, 04 Aug 2022 5:14:45 PM

அதிக அளவு புரதச்சத்து நிறைந்த  வேர்க்கடலையின்  நன்மைகள்

வேர்க்கடலையில் அதிக அளவில் நன்மைகள் நிறைந்துள்ளது. அதிக அளவு ப்ரோடீன், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.மேலும் வேர்க்கடலையில் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், மைக்ரோ மற்றும் மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உண்டு வந்தால், முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக கட்டுக்குள் இருக்கும். வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தினமும் 6-7 வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னை, குடல் அழற்சி பிரச்னை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.

மேலும் ஆரோக்கியமான முடி வளர வழி வகுக்கும்.தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உட்கொண்டு வந்தால் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற அனைத்து வகை கடலை மற்றும் நட்ஸ்களை காட்டிலும் வேர்க்கடலையில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது.வேர்க்கடலையில் தேவையான அளவு நல்ல கொழுப்புகள் அதிக அளவு உள்ளது.

benefits,peanuts ,வேர்க்கடலை,நன்மைகள்

குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.வேர்க்கடலையில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இதை தினமும் உண்டு வரும்போது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.

மேலும் வேர்க்கடலையில் அதிக அளவு வைட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. வேர்க்கடலையில் அதிக அளவு நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது. முக்கியமாக இரத்த நாளங்களில் சேரும் கொழுப்புகளை சேராமல் தடுக்கின்றது.தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்கடலையினை உண்டு வந்தால், முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக கட்டுக்குள் இருக்கும். மேலும் ஆரோக்கியமான முடி வளர வழி வகுக்கும்.

Tags :