Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • உணவில் பூண்டை அதிகளவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

உணவில் பூண்டை அதிகளவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

By: Nagaraj Thu, 12 Jan 2023 10:20:06 PM

உணவில் பூண்டை அதிகளவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

சென்னை: பூண்டை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

பால், பூண்டு, தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக்கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்துமிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக்கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.

garlic,canker sores,colds,coughs,gas,diseases are cured ,பூண்டு, கேன்சர் புண்கள், சளி, இருமல், வாயு, நோய் நீங்கும்

இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப் பூண்டுப் பற்களை வேக வைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறி விடும். வைரஸ் போன்ற தேவையற்ற கிருமிகளையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரிசெய்துவிடும்.

Tags :
|
|
|
|