Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இரும்புசத்துக்கள் நிறைந்த கரிசலாங்கண்ணியின் பயன்கள்

இரும்புசத்துக்கள் நிறைந்த கரிசலாங்கண்ணியின் பயன்கள்

By: Nagaraj Fri, 14 July 2023 8:49:40 PM

இரும்புசத்துக்கள் நிறைந்த கரிசலாங்கண்ணியின் பயன்கள்

சென்னை: நீர்வளம் மிகுந்த இடங்களில் மஞ்சள் கரிசலாங்கண்ணி வளரும். பெரும்பாலும் வீடுகளில் அழகிற்காகவும் மருத்துவப் பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது. தங்கச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘ஏ’ ஆகிய மூன்றும் ஒரு சேர சேர்ந்த மூலிகை தான் இது.

கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் தங்கச்சத்து இருப்பதால், 6 மாதம் பயன்படுத்தினால் உடல் நிறம் தகதகவென்று மாறும்.

கரிசலாங்கண்ணி மூலிகையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு 2, ஏலக்காய் 1 இவற்றை பொடி செய்து கால் தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியுடன் கலந்தால் ஒரு கிளாஸ் டீத்தூள் தயார். இந்த பொடியுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்தால் மூலிகை டீ தயார்.

jaundice,dry jaundice,bloating jaundice,white jaundice ,மஞ்சள் காமாலை, வறட்டு காமாலை, ஊதுகாமாலை, வெள்ளை காமாலை

விருப்பப்பட்டால் பால் சேர்த்து கொள்ளலாம். கரிசலாங்கண்ணி பொடியுடன் தூதுவளை பொடியையும் சேர்த்து மூலிகை டீ தயாரிக்கலாம். இந்த டீயை குடித்தால் பருவ காலங்களில் வரக்கூடிய தொற்று நோய்கள் அணுகாது.

மெல்லிய வெள்ளை துணியில் கரிசலாங்கண்ணி பொடியை கட்டி, ஒரு பாத்திரத்தில் துணியில் கட்டிய பொடி மூழ்கும் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் காயவையுங்கள். எண்ணெய் கறுப்பு நிறமாக மாறும். இதைத்தொடர்ந்து தலையில் தடவி வர, இளநரை மாறி முடி கருப்பாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் மறதி, ரத்தசோகை, இளநரை, கண் குறைபாடுகள், பல் நோய்கள், சளி, ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, சிறுநீர்க்கோளாறுகள், ரத்த அழுத்தம், மது அடிமைத்தனம், புகையிலை பழக்கம், தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெட்டை நோய், ஊளைச்சதை, கல்லீரல் சம்பந்தமான காமாலை நோய்கள், மஞ்சள் காமாலை, வறட்டு காமாலை, ஊதுகாமாலை, வெள்ளை காமாலை உள்பட பல நோய்களை கரிசலாங்கண்ணி மூலிகை குணப்படுத்தும்

Tags :