Advertisement

உடலை வலுவாக்கும் தன்மை கொண்டு தினையின் நன்மைகள்

By: Nagaraj Tue, 03 Oct 2023 11:17:09 AM

உடலை வலுவாக்கும் தன்மை கொண்டு தினையின் நன்மைகள்

சென்னை: சிறு தானிய வகைகளில் ஒன்றுதான் தினை என்றும் அழைக்கப்படுகிறது. தினையின் வேறு பெயர்களாக இறடி, ஏனல், கங்கு என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவில் பயிராகும் ஒருவகை உணவுப் பொருள் ஆகும். இனிப்புச் சுவை கொண்டது. இது வறட்சியைத தாங்கும் பயிர். இதனை ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.

இது உடலை வலுவாக்கும். சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.

சத்துக்கள்: ஈரப்பதம் - 11.2%, புரதம் - 12.3%, கொழுப்புச்சத்து - 4.3%, கனிமச்சத்து - 3.3%, நார்ச்சத்து - 8.0%, மாவுச்சத்து - 60.9%, எனவும் உமி 20% வரையிலுமாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புரதம்: தினையின் புரதம் கோதுமையின் புரதத்தின் அளவை ஒத்து இருந்தாலும் தரம் கோதுமையின் புரதத்தைவிடக் குறைவாகும். இருப்பினும் பயறு வகைகளைக் கலந்து உணவாக உட்கொள்ளும் பொழுது இந்தக் குறைபாடு நிவர்த்தியாகி விடுகின்றது. இதனைத் தரம்பிரித்துப் பார்க்கும்போது அல்புமின் மற்றும் குளோபுலின் 13%, புரோலமின் 48%, குளுடலின் 37.0% உள்ளன. இதன் செரிப்புத் திறன் 77.0% ஆக உள்ளது.

millet,moisture,nutrients,citric acids,oil ,தினை, ஈரப்பதம், சத்துக்கள், கொழும்பு அமிலங்கள், எண்ணெய்

மாவுச்சத்து - 60%, ஸ்டார்ச்சு - 55%, சர்க்கரைசத்து - 2% வரை உள்ளன. ஸ்டார்ச்சின் குருனைகள் பல அமைப்புகளில் உள்ளன. சில வட்டமாகவும், சில முக்கோணமாகவும், சில எண்கோணத்திலும் உள்ளன.

கொழுப்புச் சத்து: தினையில் கொழுப்புச்சத்து 4.3 விழுக்காடு உள்ளது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மஞ்சளாகவும், ஒளி ஊடுருவக் கூடியதாகவும் உள்ளது. உமியிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் பால் மிவுக், ஸ்டீரிக் என்ற நிறைவு பெற்ற கொழுப்பு அமிலங்கள் 10 சதம் வரையிலும் லினோலியரிக் அமிலம் 80% வரையிலும் ஒலியிக் அமிலம் 9% வரையிலும் உள்ளது.

Tags :
|