Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்த நுங்கின் பயன்கள்

கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்த நுங்கின் பயன்கள்

By: Nagaraj Sat, 29 Apr 2023 6:57:59 PM

கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்த நுங்கின் பயன்கள்

சென்னை: நுங்கின் பயன்கள்... தமிழ்நாட்டு உணவின் பாரம்பரிய அடையாளமான பனைமரத்திலிருந்து பல வகை பயனுள்ள பொருட்களை பெறுகிறோம். அதில் முக்கியமானது.

நுங்கின் மேலே உள்ள துவர்ப்பு சுவை கொண்ட தோல்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

கோடைகாலத்தில் தாகம் தனியவும், சூடு குறையவும் நுங்கு அற்புதமான உணவு. இதனால் நீர்கடுப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம். அதிக சூட்டால் கண் எரிச்சல், கண் வலி இருப்பவர்கள் காலையில் நுங்கு சாப்பிட்டு வந்தால் கண் பிரச்சினைகள் சரியாகும்.

above,better,contains,weight , கண், சத்துக்கள், பசி, பாஸ்பரஸ், நுங்கு, கட்டுப்படுத்துகிறது

நுங்கின் சத்துகள் அதீத பசி உணர்வை கட்டுப்படுத்தி நீர் சுரப்பியை அதிகப்படுத்துவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க நுங்கில் உள்ள ஆந்தோசயன் பெரிதும் உதவுகிறது.

கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் பிரச்சினைகளை நுங்கு கட்டுப்படுத்துகிறது. கடின உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சகலருக்கும் தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் உள்ளன.

Tags :
|
|