Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அதிகளவு புரோட்டின் சத்து கொண்ட பனீர் அளிக்கும் நன்மைகள்

அதிகளவு புரோட்டின் சத்து கொண்ட பனீர் அளிக்கும் நன்மைகள்

By: Nagaraj Sat, 15 Apr 2023 6:21:23 PM

அதிகளவு புரோட்டின் சத்து கொண்ட பனீர் அளிக்கும் நன்மைகள்

சென்னை: பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது. பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளும் பனீரை தைரியமாக சாப்பிடலாம்.

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு அனைத்து சத்துக்களும் தேவைப்படுகிறது. அவ்வகையில் புரோட்டீன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புரோட்டீனை நாம் சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டிலும் இருந்து பெறுகிறோம்.

சிலர் தங்களின் உணவில் பனீரை அதிக அளவில் சேர்த்துக் கொள்வர், அதற்கு காரணம் பனீர் சுவையானது மற்றும் அதிக அளவு புரோட்டீன்களை உள்ளடக்கியது. பாலை விட பனீரில் சர்க்கரையின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளும் பனீரை தைரியமாக சாப்பிடலாம்.

100கிராம் பனீரில் 265 கலோரிகள் உள்ளன. அதுமட்டுமின்றி 18.3 கிராம் புரோட்டீன், கொழுப்பு 20.8 கிராம், 208 மில்லி கிராம் கால்சியம், விட்டமின் சி 3 மில்லி கிராம், கரோட்டீன் 110 மில்லி கிராம் உள்ளது.

benefits,calories,fat,indigestion,paneer, ,கலோரி, கொழுப்பு, ஜீரண கோளாறு, நன்மைகள், பனீர்

பாஸ்பரஸ், புரோடீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியன அதிகமாகவே உள்ளன. பனீரின் பயன்கள்: பனீரை நாம் நமது உணவில் சேர்த்து சாப்பிடுவதனால் எலும்புத் தேய்மானம், மூட்டு வலி, பல்வலி எனப் பல்வேறு வலிகளைக் குறைக்கிறது.

பனீரில் இருக்கும் சத்து முழுவதும் நமது உடலுக்கு வேண்டும் என்றால் பனீரை வறுத்தோ அல்லது பொறித்தோ சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நீங்கி நமது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகிவிடும். ஆதலால் பனீரை முட்டை பொரியலுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது பனீர் க்ரேவி வைத்தும் சாப்பிடலாம்.

காலை நேரங்களில் பனீர் சாப்பிடுவது நல்லது. இரவு நேரங்களில் பனீர் சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வரும், ஆனால் ஜீரணக்கோளாறு இருப்போர் இரவில் பனீர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் பனீரில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

Tags :
|
|