Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Sat, 22 Oct 2022 10:18:48 PM

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: பொட்டுக்கடலை வைத்திருக்கும் டப்பாவில் இருந்து ஒரு கை பொட்டுக்கடலையை எடுத்து உண்ணுவதை சிலர் பழக்கமாக வைத்திருப்பர். அந்த பொட்டுக்கடலையின் சிறப்பை தான் பார்க்க போகிறோம்.


பொட்டுக்கடலை பல இடங்களில் பல பேர்களில் அழைக்கப்படுவது உண்டு. உடைத்த கடலை, பொட்டுக்கடலை, பொரிகடலை, பொட்டுக்கடலா போன்றவை அதன் பெயர்களாகும். மற்ற பருப்புகளை போல இதற்கும் பல்வேறு மகிமைகள் உண்டு. இது ஒரு மிக சிறந்த புரத பொருள்.நார்ச்சத்தும், கொழுப்பு அமிலங்களும் இதில் அதிகமாக இருக்கின்றன.

பொட்டுக்கடலை மிக குறைந்த கலோரிகள் கொண்டது. இரும்பு சத்து மிகவும் அதிகம் கொண்டது. உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் ஆகிய வைட்டமின் ஏ , வைட்டமின் பி 1 , பி 2, பி 3 , வைட்டமின் சி, வைட்டமின் டி ஆகியவை இவற்றில் உண்டு. மற்ற பருப்புகளை விட மொறுமொறுப்பாக இருக்கும். அதனால் இதனை வேக வைத்து உண்ணாமல் அப்படியே சாப்பிடலாம். மெல்லுவதற்கு மென்மையாக இருக்கும். கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் எடை குறைப்பிற்கு மிகவும் சிறந்தது

பொட்டுக்கடலை குறைந்த கலோரிகள் கொண்டது. 100கிராம் பொட்டுக்கடலையை 480 கலோரிகள் உள்ளன. இரும்பு சத்து அதிகமாக உள்ளது. பொட்டுக்கடலை நார்ச்சத்து அதிகமுள்ள ஒரு சிற்றுண்டியாகும்.


உடல் வளர்ச்சிக்கு தேவையான பலவகை ஊட்டச்சத்து கூறுகள் பொட்டுக்கடலையில் உள்ளன. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான புலன்களை சீராக இயங்க வைக்கிறது. இதன் மூலம் செரிமான கோளாறுகள் தவிர்க்கப் படுகின்றன.


குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள உணவாக இருப்பதால் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. பெருங்குடலை நீர்ச்சத்தோடு வைத்திருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது: பெண்களின் ஹார்மோன் சுரக்கும் அளவை கட்டுப்படுத்துகிறது. மற்றும் இரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைக்கிறது.

Tags :