Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அதிகாலையில் துயில் எழும் போது கிடைக்கும் நன்மைகள்

அதிகாலையில் துயில் எழும் போது கிடைக்கும் நன்மைகள்

By: Karunakaran Wed, 16 Dec 2020 10:54:07 AM

அதிகாலையில் துயில் எழும் போது கிடைக்கும் நன்மைகள்

அதிகாலையில் துயில் எழும் போது நமக்கு, நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியோடு மனமகிழ்வோடு இருக்கும். மேலும் நமக்கு ஒவ்வொரு நாளும் அதிகப்படியான நேரங்கள் கிடைத்தது போல் இருக்கும். காரணம் காலை நேரத்தில் நம்மால் மிக விரைவாக வேலைகளை செய்து முடிக்க முடியும். நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் அதிக பரபரப்பு இல்லாமல் தட்பவெட்ப நிலையும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு நாம் காலையில் எழுந்து கொள்ளும் போது சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நலம்.

காலை உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ண வேண்டும். அவசரஅவசரமாக உணவு உட்கொள்வது உணவு உண்ணும் போது இடையிடையே தண்ணீர் குடிப்பது போன்றவை இல்லாமல் நிதானமாக உண்ண வேண்டும். நாம் அணியும் ஆடை மிக முக்கியமானது எனவே நாம் அன்றைய தினம் அணியப் போகும் ஆடையை நம் விருப்பப்படி தேர்வு செய்து அணிய வேண்டும். நம் உடலில் இருக்கும் நேர்த்தியும் அழகும் தான் நம்மை புதிதாக பார்ப்பவர்களுக்கு நம்மேல் ஒரு மரியாதையை உண்டு செய்யும்.

waking up,early morning,refreshing,body health ,எழுந்திருத்தல், அதிகாலை, புத்துணர்ச்சி, உடல் ஆரோக்கியம்

நாம் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியல் தயார் செய்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான வேலை எதுவோ அதை கூடியமாணவரை காலை பத்து பதினோரு மணிக்குள் முடித்துவிடவேண்டும். அப்போதுதான் மீதி உள்ள நேரம் நமக்கு எந்தவித அழுத்தமும் இல்லாமல் இயல்பாக நம்மால் பணியை செய்ய முடியும். மற்ற பணிகளில் எந்த வேலை அதிக பயன் தரக்கூடியது என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொன்றாக செய்து கொண்டு வரவேண்டும்.

பணி செய்யும் போது நமக்கு சில நேரங்களில் அதிகப்படியான சோம்பல் வரலாம். உங்களின் சோர்வின் காரணத்தை கண்டறியுங்கள். உங்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய செய்திகளை எண்ணங்களை மனதில் கொண்டு வாருங்கள். நீங்கள் கடந்து போக வேண்டிய தூரத்தை நினைவில் வையுங்கள். ஜெயித்தவர்கள் உருவத்தை உங்கள் மனதில் பதிய வையுங்கள். உங்கள் மனதில் தோன்றுகின்ற அனைத்தையும் ஒரு தாளில் அவ்வப்போது எழுதுங்கள். இவ்வாறு எழுதுவது சிறந்த பயனளிக்கும்.


Tags :