Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை

By: Nagaraj Sat, 15 Oct 2022 10:43:37 AM

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை

சென்னை: தர்பூசணி புத்துணர்ச்சியூட்டும் குறைந்த கலோரி கொண்ட கோடை கால பழமாகும். இதில் அதிகமான நீர் சத்து மற்றும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

தர்பூசணி 90 சதவீதம் தண்ணீரை கொண்டது. இது கோடையில் ஏழை எளிய மக்களுக்கு தாகம் தீர்க்கும் சிறந்த பழமாக இருக்கிறது. இந்த பழம் இயற்கையாகவே நீர் மற்றும் இனிப்பை கொண்டது. தர்பூசணியில் ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன.

தர்பூசணியில் இரும்புச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இது நம் உடலுக்கு அதிக நன்மையை கொடுக்கிறது. தர்பூசணி நவம்பர் மாதத்தில் சாகுபடி செய்து ஜனவரி மாதத்தில் சந்தைக்கு வருகிறது. ஜனவரி முதல் கோடை காலம் முடிந்து ஜூன் மாதம் வரை சந்தையில் விற்கப்படுகிறது. தர்பூசணியின் சாகுபடி காலம் 90 நாட்கள் ஆகும். தர்பூசணியின் எடையானது குறைந்தது 8 முதல் 12 கிலோ வரை இருக்கும்.

beautifying,blood vessel,heart disease,skin,watermelon , அழகாக்கும், இதய கோளாறு, சருமம், தர்பூசணி, ரத்த நாளம்

தர்பூசணியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.தர்பூசணி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பி.பி. உள்ளவர்கள் தாராளமாக இந்த தர்பூசணியை சாப்பிட்டு வரலாம். பி.பி. படிப்படியாக குறையும். ரத்த நாளங்களில் உள்ள அழுக்குகளை நீக்கவும் இந்த தர்பூசணி உதவுகிறது. மற்ற பழங்களில் இல்லாத பைட்டோ நியூட்ரியன் சத்துக்கள் இந்த பழத்தில் இருப்பதினால் உடலின் ஆரோக்கியத்தை உயர்த்தி சுறுசுறுப்பாக உடலை வைக்கிறது.

தர்பூசணியில் சிட்ருலின் எனும் புரதச்சத்து இருப்பதால், இது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இது இருதயக் கோளாறுகளையும் சரி செய்கிறது. தர்பூசணி தலைமுடி மற்றும் சருமத்தை அழகாக்கும். ஒருசிலருக்கு வைட்டமின் சி குறைபாட்டால் ஆஸ்துமா வருகிறது. எனவே தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்,

Tags :
|