Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • இளநரை, தூக்கமின்மையை போக்கும் சுரைக்காயின் நற்பலன்கள்

இளநரை, தூக்கமின்மையை போக்கும் சுரைக்காயின் நற்பலன்கள்

By: Nagaraj Tue, 13 Oct 2020 1:58:43 PM

இளநரை, தூக்கமின்மையை போக்கும் சுரைக்காயின் நற்பலன்கள்

இளநரை, தூக்கமின்மை உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வை அளிக்கும் சுரைக்காய் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, ஆப்பிரிக்காவின் தீபகற்ப பகுதி மற்றும் தென் அமெரிக்காவில் சுரைக்காய் விளைகிறது. 100 கிராம் அளவுள்ள சுரைக்காயில் 15 கலோரி ஆற்றல் உள்ளது. 1 கிராம் கொழுப்பு காணப்படும். சுரைக்காயில் 96 சதவீதம் நீர்ச்சத்து உண்டு.

நார்ச்சத்து, வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், துத்தநாகம் (ஸிங்க்), தியாமின், இரும்புச் சத்து, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு ஆகியவை காணப்படுகின்றன. சுரைக்காய் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையும். அதிலுள்ள அதிகப்படியான நீர்ச்சத்து, உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. சுரைக்காய்க்கு மனதை அமைதிப்படும் பண்பு உள்ளது. உடலையும் இளைப்பாற்றுகிறது.

zucchini,remover,acidity,insomnia ,சுரைக்காய், அகற்றும், அமிலத்தன்மை, தூக்கமின்மை

சுரைக்காய் இதயத்துக்கு நல்லது. வாரத்திற்கு மூன்று முறை சுரைக்காய் ஜூஸ் அருந்துவது இதயத்தை ஆரோக்கியமாக காக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். சுரைக்காயில் இரும்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் உள்ளது. தினமும் சுரைக்காய் ஜூஸ் அருந்தினால் உடல் எடையை குறைக்கலாம்.

சுரைக்காய் ஜூஸுடன் நல்லெண்ணெய் கலந்து அருந்தினால் ஆழ்ந்து உறங்கலாம். மாசுபடுதல் காரணமாக இளவயதிலேயே முடி நரைப்பது பெரிய பிரச்னையாகி வருகிறது. சுரைக்காய் ஜூஸ் அருந்தினால் முடி நரைப்பதை தடுக்கலாம்.

வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை சுரைக்காய் குறைக்கும். அதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் உணவு செரிமானமாக உதவும். சுரைக்காய் உடலை இயற்கையாக சுத்தம் செய்கிறது. உடலிலுள்ள நச்சுகளை சுரைக்காய் அகற்றும். அகவே, சருமம் மிளிர ஆரம்பிக்கும்.

Tags :