Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • நார்ச்சத்து நிறைந்த சுரைக்காயால் கிடைக்கும் நன்மைகள்

நார்ச்சத்து நிறைந்த சுரைக்காயால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Mon, 23 Jan 2023 6:40:30 PM

நார்ச்சத்து நிறைந்த சுரைக்காயால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: சுரைக்காயில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் காணப்படுகின்றன. சுரைக்காயில் சுண்ணாம்பு சத்து, விட்டமின் சி, விட்டமின் கே, நார்ச்சத்து என அனைத்து வகையான சத்துக்கள் காணப்படுகின்றன.

அதிகளவு சுரைக்காயை உணவில் சேர்ப்பது உங்க ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் வயதான காலத்தில் ஏற்படும் மறதி நோயான அல்சைமர் போன்ற நோய் வராமல் தடுக்க முடியும். சுரைக்காயில் உள்ள உயர்ந்த அளவு பொட்டாசியம் உங்க இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். இது உங்க உயர் இரத்த அழுத்தத்தை சீராக்குதல், உயர் கொழுப்பை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது.

bottle gourd,vitamin c,vitamin k,calcium,fiber ,சுரைக்காய்,சுண்ணாம்பு சத்து,விட்டமின் சி,விட்டமின் கே,கால்சியம்

சுரைக்காயில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே நமக்கு ஏற்படும் மலச்சிக்கல், குடலில் ஏற்படும் புண்கள், மூலநோய், வயிற்று பிரச்சனைகளை போக்க சுரைக்காய் பயன்படுகிறது. மூல நோய்களில் பல வகையுண்டு. உள்மூலம், வெளி மூலம், ரத்த மூலம் என ஏராளமான வகைகள் உண்டு. அவற்றையெல்லாம் மிக எளிதாகக் குணப்படுத்தும் ஆற்றல் சுரைக்காய் கொண்டுள்ளது.

கோடை காலத்தில் உடல் சூடு அதிகமாக இருக்கும். மேலும் சரும சம்பந்தமான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து உங்க உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும், வளர்சிதை மாற்ற வேகத்தை அதிகரிக்கவும், முழு சக்தியுடன் செயல்படவும் உதவியாக இருக்கும்.

Tags :