Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • மன அழுத்தத்தை தடுப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும் கருப்பு கவுனி அரிசி

மன அழுத்தத்தை தடுப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும் கருப்பு கவுனி அரிசி

By: Nagaraj Sat, 10 Sept 2022 11:40:00 PM

மன அழுத்தத்தை தடுப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும் கருப்பு கவுனி அரிசி

சென்னை: கருப்பு கவனி அரிசியானது பல ஆரோக்கியங்களுக்கும், மருத்துவங்களுக்கும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருப்பு கவுனி அரிசியில் சில மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் அப்படி என்ன நன்மைகள் இருக்கிறது. தெரிந்து கொள்வோம்.

கருப்பு கவுனி அரிசியில் அதிகப்படியான இரும்புசத்து, நார்ச்சத்து, கால்சியம் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்து உள்ளன. கருப்பு கவுனி அரிசியில் மிகவும் அதிகமான இரும்பு சத்துக்கள் இருப்பதால் இவை இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்களுக்கும் நன்மை தருகிறது.

கல்லீரலில் உள்ள செல்களை புதுப்பிக்கும் மாற்றங்களையும் இந்த கருப்பு கவுனி அரிசிக்கு உள்ளது. இந்த கருப்பு கவுனி அரிசியில் மிக குறைந்த அளவு Carbohydrates இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது நன்மை தருகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கருப்பு கவுனி அரிசியை சேர்த்துக்கொள்வதால் நன்மைகள் அளிக்கிறது. இருதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு இந்த கருப்பு கவுனி அரிசியை உபயோகித்து வரலாம். அதுமட்டுமில்லாமல் கேன்சர் வருவதையும் தடுக்கிறது.

black cowrie,stress,medicinal benefits,fiber,stomach ache ,கருப்பு கவுனி, மன அழுத்தம், மருத்துவ பயன்கள், நார்ச்சத்துக்கள், வயிற்று வலி

தோல் சம்மந்தப்பட்ட அரிப்பு, படை, புண்கள், எரிச்சல் போன்ற அலர்ஜிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த கருப்பு கவனி அரிசி நல்ல ஒரு மருந்தாக இருக்கிறது. இந்த அரிசியில் அதிகம் Antioxidant இருப்பதால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்துக்கள் அதிகம் காணப்படுவதால் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து HDL என்னும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் நார்ச்சத்துக்கள் இருப்பதால் செரிமான கோளாறுகள், வயிறு உப்புதல், வயிற்று போக்கு, வயிற்று வழிகள் பிரச்சனைகளை தடுப்பதற்கும் உதவியாக இருக்கிறது.

இரத்த குழாய்களில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த கருப்பு கவுனி அரிசி உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் மன அழுத்தத்தை தடுப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

Tags :
|
|